×

5வது பெரிய பொருளாதாரமானாலும் தனிநபர் வருமானம் இன்னும் உயரவில்லையே?: ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் கருத்து

ஐதராபாத்: உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சி அடைந்திருப்பது சாதனை என்றாலும், அதற்கேற்ப தனிநபர் வருமானம் மிக வேகமாக வளர வேண்டிய கட்டத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் கூறி உள்ளார். டெல்லியில் நடந்த உயர்கல்விக்கான ஐசிஎப்ஏஐ அறக்கட்டளையின் 13வது பட்டமளிப்பு விழாவில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் பங்கேற்று பேசியதாவது: கொரோனா, ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு, இந்தியாவின் வளர்ச்சிக்கான தெளிவான வரைபடத்தை வகுக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதுவே முதலும், முக்கியமான பணியுமாகும். இந்தியா இன்று உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக வளர்ந்துள்ளது நிச்சயம் பெரிய சாதனைதான். இருப்பினும், தனிநபர் வருமானம் வேறு விதமாக உள்ளது. 2020ம் ஆண்டில் தனிநபர் வருமானத்தை பொறுத்த வரை 197 நாடுகளில் இந்தியா பிடித்த இடம் 147 மட்டுமே. இது இன்னும் நாம் வெகு தூரம் பயணிக்க வேண்டியிருப்பதை மட்டுமே காட்டுகிறது.

எனவே, தனிநபர் வருமானத்தில் வேகமாக வளர்ச்சி அடைவதைத் தவிர வேறு வழி நமக்கு இல்லை. அடுத்த 20 ஆண்டுகளில் தொடர்ந்து 7% வளர்ச்சி விகிதத்தை நாடு எட்டினால், அது பொருளாதாரத்தில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தும். இந்தியா வளர்ந்த பொருளாதாரத்தின் நிலையை கிட்டத்தட்ட தொடக்கூடும்.

The post 5வது பெரிய பொருளாதாரமானாலும் தனிநபர் வருமானம் இன்னும் உயரவில்லையே?: ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் கருத்து appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,India ,Former ,Governor ,Reserve Bank ,
× RELATED தெலங்கானாவில் நேற்றிரவு அரசு...